உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆஸி அணி அறிவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – 12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று(15) அறிவித்துள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு;

ஆரோன் பின்ஞ் (தலைவர்), ஜேசன் பெஹ்ரெண்டாப், அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர்), நாதன் கோல்டர்-நைல், பேட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜி ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சம்பா.

குறித்த உலகக் கிண்ண தொடரானது, இங்கிலாந்தில் மே 30ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரை இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.