(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதியினால் அனுப்பப்படும் குறுந்தகவலை எந்தவொரு வாடிக்கையாளராலும் முடக்க (BLOCK) முடியாது என பிரபல முதல்தரவரிசை தொலைபேசி நிறுவனமான டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் அனுப்பப்படும் குறுந்தகவலை BLOCK செய்தாலும், ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி மீளவும் மீளவும் தமக்கு கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் முன்வைத்திருந்த முறைப்பாட்டுக்கு குறித்த நிறுவனம் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்தினை பதிவு செய்துள்ளது.
குறித்த குறுந்தகவலை ஜனாதிபதி அலுவலகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தினால் கோரிய கோரிக்கைக்கு அமையவே குறித்த குறுந்தகவல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்படுவதாகவும் அதனை BLOCK செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

