தெற்கு அதிவேக வீதியில் மேலதிக வௌியேறும் வாயில்கள்…

(FASTNEWS|COLOMBO) அதிவேக நெடுஞ்சாலையின் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் தெற்கு அதிவேக வீதியின் தெரிவுசெய்யப்பட்ட சில பகுதியில், மேலதிக வௌியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரயாணிகளின் நலன் கருதி மேலதிக அலுவலக பணியாளர்களையும் சேவையில் இணைத்துக் கொண்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் முகாமைத்துவம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை தினந்தோறும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிவேக வீதியில் பயணித்துள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலையின் முகாமைத்துவம் மற்றும் நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.