ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

(FASTNEWS|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த ​கோரிக்கைக்கு அமைய மேலும் 6 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் 18 உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை, ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.