
நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை நாளை(17) முதல்…
(FASTNEWS|COLOMBO) நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் நாளை(17) முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.
இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படும் எனவும் இவற்றைக் களஞ்சியப்படுத்தவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரை 5 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்தார்.
அம்பாறையில் ஆகக்கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.