சங்கா – ஹரின் நுவரெலிய ஹோட்டல் சமையல்காரர்களாக.. – புத்தாண்டில் கிழங்குப் புடிங்…

(FASTGOSSIP| COLOMBO)- நுவரெலியா உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையினை உலகளவில் கொண்டு செல்லும் ஒரு நோக்கத்துடனும், உள்நாட்டு கிழங்கு விவசாயிகளை காப்பதற்கும் நுவரெலியா க்ரேண்ட் ஹோட்டல் ஊடாக உருளைக்கிழங்கு புடிங் இன்று(16) தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

குறித்த ஹோட்டலின் பொதுமுகாமையாளர் ரிபான் ரஷீப் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார, நுவரெலிய மாநகர சபை நகராதிபதி சந்தனலால் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.