சுமார் 4,169,000 ரூபாய் பெறுமதிமிக்க ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது..

(FASTNEWS|COLOMBO) ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவரிடம் இருந்து 83,380 சிகரட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வேவல்தெனிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் எனவும் குறித்த பெண்ணிடம் இருந்து 43,480 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 39,900 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.