மதூஷின் உறவினர் உட்பட 06 பேர் இலங்கைக்கு…

(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரிற்குள் மாகந்துர மதூஷின் உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், குறித்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.