நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை இன்று(17) முதல்…

(FASTNEWS|COLOMBO) விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் எதிர்வரும் ஒருமாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.

அம்பாறையில் ஆகக்கூடுதலான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 5 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் நெற்களஞ்சியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.