மஹியங்கனை விபத்தில் பலியான 10 பேரினதும் இறுதிக் கிரியைகள் இன்று(18)…

(FASTNEWS | COLOMBO) – பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னாள் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான 10 பேரினதும் உடல்கள் திடீர் மரண பரிசோதனைகளுக்கு பின்னர் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிசார் தெரிவித்திருந்தனர்.

குறித்த விபத்தில் பலியான 10 பேரினதும் இறுதிக் கிரியைகள் இன்று(18) கத்தோலிக்க தேவாலய கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கிறிஸ்துவ வழிபாட்டு முறைப்படி அடக்கம் செய்யவுள்ளதாக குடும்ப உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நேற்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த வாகன விபத்தில் 03 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

தியதலாவையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வேனில் 12 பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.