(FASTGOSSIP | COLOMBO) – துபாயில் கைதாகிய மாகந்துரே மதூஷ் இனது நெருங்கிய சகாவான கஞ்சிபான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என உயர் மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக பொலிஸ் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதூஷ் துபாயில் இருக்கும் போது சில அரசியல்வாதிகள் துபாய் சென்று அவருடன் விருந்துபசாரங்களிலும் கலந்து கொண்டுள்ளமை தொடர்பிலும், மதூஷுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் பலர் குறித்தும் இம்ரானிடமிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த ஆறு பேரிற்குள் மாகந்துர மதூஷின் உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.