(FASTNEWS|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், மன்னர் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் 4 மாகாணங்களில் நாளை(19) 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழிய உள்ளதுடன் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி 75 மில்லி அளவில் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.