நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(FASTNEWS|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான காலநிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.