(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று(19) சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் சுமார் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.