(FASTNEWS|COLOMBO) குமண தேசிய பூங்காவின் சிறுத்தைகள் நடமாடும் பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக தடை செய்யப்பட்ட வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி ஊழியரொருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பூங்காவின் பொறுப்பதிகாரி சிசிர குமார தெரிவித்தார்..
குமண தேசிய பூங்காவில் தற்போது 30 தொடக்கம் 40 வரையிலான சிறுத்தைகள் உள்ளமை குறிபபிடத்தக்கது.
இதேவேளை, தேசிய வனவிலங்கு பூங்காக்களில் சுற்றுலா மேற்கொள்ளும்போது மிகவும் அதானத்துடன் செயற்பட வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் எம்.பீ.சீ. சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
திறந்தவெளி வாகனங்களில் பயணித்தல், தனியாக நடத்து செல்லுதல் மற்றும் வனஜீவராசிகள் உலாவும் பகுதிகளில் உட்பிரவேசித்தல் என்பனவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.