(UPDATE) கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம் – நூற்றுக்கணக்கானோர் காயம்

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

————————————-(UPDATE)

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம்

(FASTNEWS|COLOMBO) கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தோர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நீர் கொழும்பு கட்டான – கட்டுபிட்டிய தேவாலயத்திலும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.