(FASTNEWS|COLOMBO) கொழும்பை உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீரில் விஷம் கலந்துள்ளதாக வதந்திகளை பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.