“தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தணையினை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வாக்குகளை சேகரிக்கும் வேலையினைமுன்னெடுக்கின்றது. ஆனால் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனவாதமற்ற முறையில் தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஓரே அணியில் இருக்கக் கூடிய ஜனநாயக உரிமையினை வழங்கியுள்ளது.”
– அமைச்சர் றிசாத் பதியுதீன் –
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வெளி ஓயா (மணல் ஆறு), ஜனகபுர, சம்பத் நுவர, கல்யாணி புர, மாயாவ, எகட்டுவெவ, எதாவெடுனுவெவ, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறினார்.


