(FASTNEWS|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 26ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதன் காரணமாக, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வானிலை அவதான நிலையத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ , மத்திய , தென் , ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.