198 டெட்டனேட்டர்கள் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) நுவரெலிய – ஹாவாஎலிய – மஹிந்த மாவத்தையில் கால்வாய் ஒன்றிலிருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்திலிருந்து தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நுவரெலிய இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.