(FASTNEWS|COLOMBO) கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்ததாக முன்னதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த எண்ணிக்கை பிழையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரையில் உறுதி செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் படி, 253 பேர் இந்த குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.