சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு பாதிப்பில்லை…

(FASTNEWS|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.