(FASTNEWS|COLOMBO) தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும், மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத்திறைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று(29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த கட்டளையின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியானதும் நல்லிணக்கமானதுமான சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.