பிரதமரை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(29) சந்திக்கின்றனர்.

(FASTNEWS | COLOMBO) – பொலிஸ்மா மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது தொடர்பிலான யோசனை ஒன்றை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று(29) பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் வைத்து சந்திக்க தீர்மானித்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.