பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கு எதிர்கட்சித் தலைவரிடமிருந்து கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் தலைதூக்கியுள்ள அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(28) பிற்பகல் விஜேராமையில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, தமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி, அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு அறிக்கை தயாரிக்குமாறு எதிர்கட்சித் தலைவர், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் கோரியுள்ளார்.