(FASTGOSSIP | COLOMBO) – இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள facebook உட்பட சமூக வலைத்தளங்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கவில்லை என்றால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடு facebook உட்பட சமூக வலைத்தளங்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே அந்த நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சேவை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.