(FASTGOSSIP | COLOMBO) – தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்துத் துறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்க வேண்டும் என கடந்த 26ஆம் திகதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும், இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எந்த நிலையிலும் சரத் பொன்சேக்காவிற்கு பாதுகாப்பு அமைச்சை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.