வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலபிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 560 சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் அதிரப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, உகன பகுதியில் சட்டவிரோத சிகரட்டுக்கள் 200 உடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.