(FASTNEWS|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மானும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மாநகர சபை உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் நாவல பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களிடம் இருந்து 3 வாள்கள் , டெப் கணினி உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.