(FASTNEWS|COLOMBO) நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் இன்று அதிகாலைசட்டவிரோமான முறையில் அனுமதி பத்திரமின்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.