MCCயின் தலைவராக குமார் சங்கக்கார…

(FASTNEWS|COLOMBO) இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

நேற்று லோட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் எண்டனி வேஃபோடினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது

மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தமது தலைமைப் பதவியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் குமார் சங்கக்கார ஏற்கவுள்ளார்.

அந்தப் பொறுப்புக்கு குமார் சங்கக்கார தேர்ந்தெடுக்கப்பட்டால் மெரில்போன் கிரிக்கெட் கழக தவிசாளர் பொறுப்பை ஏற்ற முதலாவது வெளிநாட்டுப் பிரஜை என்ற பெருமை அவரை சாரும்.