(FASTNEWS | COLOMBO) – சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரான்ஸில் நேற்று(01) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில், 14 காவல்துறையினர் உட்பட 38 பேர் காயமடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.