ஐ.பி.எல் தொடரிலிருந்து ஸ்மித், வோர்னர் உள்ளிட்ட வீரர்கள் வெளியேற்றம்…

(FASTNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்ற வோர்னர், ஸ்மித், ஸ்டொய்னிஸ் மற்றும் பெஹ்ரென்ட்ரெப் ஆகிய வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இடைநடுவில் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு சென்றுள்ளனர்.

இவ்வருடம் ஐபிஎல் தொடருக்காக அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஐந்து வீரர்கள், ஐந்து அணிகளினால் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டனர். இதில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் அழைப்பினால் உலகக் கிண்ண குழாமில் இடம்பெற்ற இவர்களில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜேசன் பெஹ்ரென்ட்ரெப் ஆகியோர் தொடரின் இடைநடுவில் வெளியேறி அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளனர்.

உலகக்கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலிய அணியானது, வீரர்களுக்கு விசேட பயிற்சி முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த பயிற்சி முகாமானது நாளை(02) ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.