அளுத்கம – தர்கா நகரில் விசேட சுற்றிவளைப்பு…

(FASTNEWS|COLOMBO) பொலிசார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து, அளுத்கம – தர்கா நகருக்கு அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.