“ஆவா” குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய நபர் கைது…

(FASTNEWS|COLOMBO) யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் பொலிஸ் அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.