(FASTNEWS | COLOMBO) – புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடியிருப்பில் வைத்து கைதான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ஒருங்கிணைப்புதாரிகள் இருவரையும் 90 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதில் உள்ள மொஹமத் இஸ்மாயில் மற்றும் மொஹமத் அலியார் மொஹமத் நியாஸ் ஆகிய சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டில் இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் அடங்கிய கடிதங்கள், வெட்டுக்கள், தொலைபேசி சார்ந்த உபகரணங்கள் மற்றும் மடிக்கணணி ஆகியவை கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த இருவரும் காத்தாங்குடி பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.