(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் கல்வி நடவடிக்கைக்காக பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது சம்பந்தமாக ஆணைக்கழுவுக்கு அறிவிக்குமாறு துணை வேந்தர்களுக்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி அது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.