வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்…

(FASTNEWS|COLOMBO) சட்டவிரோதமாக வைத்திருக்கும் வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் பொலிஸ், இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று(04) அல்லது நாளைய தினத்திற்குள்(05) பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.