ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்விநடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு..

(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கைகளை மீள அறிவிக்கும் வரை ஒத்திவைக்க ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள், முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் வெளிப்புற பாடப்பிரிவுகள் மீள அறிவிக்கும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் துணைவேந்தர், பேராசிரியர் சுதந்த லியனேகே தெரிவித்துள்ளார்.