(FASTNEWS|COLOMBO) நாளை(06) பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று(05) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று(05) பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.