(FASTNEWS|COLOMBO) தலவாக்கலை நகருக்கு அருகில் நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இதன்போது அங்கிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது மண்மேடு சரிந்துள்ள நிலையில், பிரதேசவாசிகள் மற்றும் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் பணியாளர்களும் இணைந்து அவர்களை மீட்டு மருத்துமவனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.