(FASTNEWS|COLOMBO) பாராளுமன்றத்துக்கு 5-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இந்நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5-வது கட்டத்துடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைய உள்ளது.
5-வது கட்டத்துடன் 425 தொகுதிகளில் தேர்தல் முடிய உள்ளது. இதைத்தொடர்ந்து 12 ஆம் திகதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்டமாகவும், 19 ஆம் திகதி 59 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.