வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கைக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பில் பாராளுமன்ற வளாகம்…

(FASTGOSSIP|COLOMBO) – பாராளுமனறம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் CCTV கமராக்களும் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஸ்கேனர்கள், பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று(06) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்க் இடையிலான கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.