இனவன்முறை சம்பவங்களில் முப்படையினரும் பொலிஸாரும் பக்கச்சார்பின்றி தமது பணிகளைச் செய்ய வேண்டும் – இரா.சம்பந்தன்

(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பில் ஆரம்பித்துள்ள இன வன்முறையை அரசு கவனத்தில் கொண்டு, வன்முறையாளர்களை கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த தரப்பிடம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றிரவு(05) அவர் தெரிவித்ததாவது; மத வன்முறை, இன வன்முறை இந்நாட்டில் இனிமேல் வேண்டாம். இவை மீண்டும் நடைபெறாதவாறு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முப்படையினரும் பொலிஸாரும் பக்கச்சார்பின்றி தமது பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.