
சைட்ஸ் சர்வதேச மாநாடு ஒத்திவைப்பு..
(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் இடம்பெறவிருந்த அருகிவரும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான சர்வதேச வர்த்தக மாநாட்டினை (Convention on International Trade in Endangered Species of Wild Fauna & Flora)-(CITESCoP 18) ஒத்திவைப்பது தொடர்பில் ஜெவீவாவில் அமைந்துள்ள சைட்ஸ் (CITES) பொதுச் செயலாளர் அலுவலகத்தினூடாக கோரப்பட்ட கோரிக்கையினை சைட்ஸ் செயலாளர் அலுவலகம் அங்கீகரித்துள்ளது.
குறித்த மாநாட்டில் 183 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கலாக, 400 பேர் கலந்து கொள்ளவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெறவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த ஒத்திவைப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.