உலகக் கிண்ண மேற்கிந்திய அணியின் உப தலைவராக க்ரிஸ் கேய்ல் நியமனம்…

(FASTNEWS | COLOMBO) – மேற்கிந்திய தீவுகளின் உலக கிண்ண அணிக்கான உப தலைவராக க்றிஸ் கெயில் பெயரிடப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

289 ஒருநாள் போட்டிகளில், 10,151 ஓட்டங்களைப் பெற்றுள்ள க்ரிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஒருநாள் போட்டியொன்றில 215 ஓட்டங்களைப் பெற்று அதிக கூடிய ஓட்டங்களைப் பெற்றவராகவும் உள்ளார்.

அணியின் சிரேஷ்ட வீரரான அவருக்கு தற்போது உபதலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட க்றிஸ்கெயில், சிரேஷ்ட வீரர் என்ற அடிப்படையில் அணியின் தலைவருக்கும் அணிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தமது கடமை என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.