மியான்மர் அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களும் விடுவிப்பு…

(FASTNEWS | COLOMBO) – மியான்மர் இராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு இரகசியங்களை கசியவிட்டதாக 2 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரையும் தற்போது மியான்மர் அரசு விடுவித்துள்ளது.

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் கடந்த 2017ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் இராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து செய்தி சேகரித்து வந்தன.

இதற்கிடையே, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வா லோன், யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிகையாளர்களை யாங்கூன் போலீசார் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.