(FASTNEWS|COLOMBO) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கமைய, நாடு பூராகவும் புதிதாக 38 பிரதேச செயலகங்களை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று(07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.