(FASTNEWS|COLOMBO) தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரை விடுவிப்பதற்காக ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கோரி இந்த கையூட்டல் வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஹொரவபொத்தான பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர், முக்கரவெவ பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் ரூபாயை கையூட்டலாக இலஞ்சம் வழங்குவதாக கூறியுள்ள குறித்த சந்தேக நபர், அதில் ஒரு தொகை பணத்தை வழங்குவதாகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் விடுவிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பணத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.