(FASTNEWS | COLOMBO) – தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று(07) அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் மீண்டும் யோசனையாக முன்வைக்கப்பட்ட போது, இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமை 01 இலட்சத்து 83,000 டெப் கருவிகள் மாணவர்களுக்காக வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.